நடிகர் நானியின் ஹாய் நான்னா திரைப்படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா.. இதோ முழு விவரம்
ஹாய் நான்னா
வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நானி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு கோலிவுட் நல்ல வரவேற்பு உண்டு.
தற்போது நானி நடிப்பில் இயக்குனர் சௌர்யுவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாய் நான்னா திரைப்படம் கடந்த டிசம்பர் 7 -ம் தேதி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியானது.
இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வாஹப் இசையமைத்துள்ளார்.
வசூல்
தற்போது ஹாய் நான்னா படத்திற்கு ரசிகர்களை கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் இப்படம் உலக அளவில் ரூபாய் 44.50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
