தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்..

By Jeeva May 29, 2022 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்க்கிடையே தான் வெளியாகும். அப்படி வெவ்வேறு காலகட்டத்தில் பெரிய பட்ஜெட் எடுக்கப்படும் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். உதாரணமாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தை எடுத்துக்கொண்டால் அந்த காலகட்டத்தில் பெரிய பட்ஜெட்டில் அப்படம் வெளியானது. அந்த வகையில் தற்போது இதுவரை தமிழ் சினிமாவில் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்களை குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.

2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 2.0. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இப்படத்தை இந்தியளவில் எதிர்பார்த்தனர். ரஜினியுடன் முதன்முறையாக பாலிவுட் திரையுலகின் டாப் நடிகர் அக்ஷய் குமாரும் வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவரை தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் திரைப்படம் 2.0, இப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ.500 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

   தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்.. | Highest Budget Movie In Tamil

தர்பார்

தமிழ் சினிமவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது இந்த தர்பார் திரைப்படம். தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் இயக்குனரான முருகதாஸ் முதல்முறையாக ரஜினியுடன் கூட்டணி அமைத்த இப்படத்தை கோலிவுட் வட்டாரமே எதிர்பார்த்தது. அப்படியான பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படத்தின் பட்ஜெட் ரூ.200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

  தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்.. | Highest Budget Movie In Tamil

பிகில்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். தொடர் பிளாக் பஸ்டர் வெற்றிகளுக்கு பின் விஜய் -அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக பிகில் படத்திற்காக இணைந்தது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவான இப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அதன்படி இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ.180 கோடி.

  தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்.. | Highest Budget Movie In Tamil

வலிமை

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது வலிமை. இப்படத்திற்கு உண்டான எதிர்பார்ப்பு குறித்து அனைவரும் அறிந்த விஷயம், அப்படியான எதிர்பார்ப்பு உண்டாக காரணம் அஜித் மற்றும் வினோத் கூட்டணி தான். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அமைந்த இந்த கூட்டணியில் உருவான படம் வலிமை. முழுக்க முழுக்க பைக் மற்றும் ஸ்டண்ட் காட்சிகளுடன் எடுக்கப்பட்ட இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.150 கோடி.

 தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்.. | Highest Budget Movie In Tamil

பீஸ்ட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருந்தே படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பிவிட்டது. அதுபோக KOKO, டாக்டர் உள்ளிட்ட வெற்றிப்படங்களை தொடர்ந்து நெல்சன் முதல்முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்திருந்தார். படம் முழுக்க ஒரே மாலுக்குள் நடக்கும் கதையாக இருந்ததால், இதற்காக பிரமாண்ட செட் அமைத்து எடுக்கப்பட்டது. அப்படியான இந்த பீஸ்ட் படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.150 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்.. | Highest Budget Movie In Tamil

AK 61 பட கெட்டப்பில் வெளியான அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ! எங்கு சென்றுள்ளார் தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US