தமிழ்நாட்டில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட்
வசூல்
ஒரு திரைப்படத்தின் வசூல் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அந்த திரைப்படம் முதல் நாளன்று எவ்வளவு வசூல் செய்கிறது என்பதும் திரையுலகில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

அதுவும் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் என்றால், முதல் நாளன்று உலகளவில் எவ்வளவு வசூல் வந்தது? வெளிநாட்டில் எவ்வளவு வசூல் வந்தது? தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் வந்தது என்பது முக்கியமான ஒன்று.

குறிப்பாக தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள். சமீபகாலமாக தயாரிப்பு நிறுவனங்களும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றனர்.
டாப் 10 லிஸ்ட்
இந்த நிலையில், இதுவரை தமிழ் திரையுலகில் வெளிவந்த திரைப்படங்களில், தமிழ்நாட்டில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன, அதில் டாப் 10-ல் எந்தெந்த படங்கள் எல்லாம் இடம்பிடித்துள்ளன என்பதை இந்த பட்டியலில் பார்க்கலாம் வாங்க.
பீஸ்ட் - ரூ. 35 கோடி
லியோ - ரூ. 34 கோடி
குட் பேட் அக்லி - ரூ. 31 கோடி
கோட் - ரூ. 30.8 கோடி
கூலி - ரூ. 30 கோடி
சர்க்கார் - ரூ. 29 கோடி
வலிமை - ரூ. 28 கோடி
விடாமுயற்சி - ரூ. 27 கோடி
ஜெயிலர் - ரூ. 27 கோடி
மாஸ்டர் - ரூ. 26 கோடி