2025ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படம் காந்தாரா சாப்டர் 1.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்
காந்தாரா 1
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் காந்தாரா. 2022ல் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து, மாபெரும் வெற்றியடைந்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 இந்த ஆண்டு வெளிவந்தது. இப்படத்தையும் ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து ருக்மிணி வசந்த், குல்ஷன், ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் இப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
அன்னம் சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய முக்கிய நாயகி திவ்யா கணேஷ்... அவருக்கு பதில் இனி இவர்தான்
வசூல்
இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 818 கோடி வசூல் செய்துள்ளது என அறிவித்துள்ளனர். 2025ஆம் ஆண்டில் இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை காந்தாரா சாப்டர் 1 படைத்துள்ளது.

மேலும், பாகுபலி 1&2 மற்றும் கேஜிஎஃப் 2 படங்களை தொடர்ந்து தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாகவும் மாறியுள்ளது.