2024ல் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட்
2024ஆம் ஆண்டு
2024ல் தமிழ் திரையுலகில் சிறந்த விளங்கிய விஷயங்கள் குறித்து தொகுத்து வழங்குவது வழக்கம் தான். அந்த வகையில் 2024ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிகம் வசூல் செய்த படங்கள்
இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் தளபதி விஜய்யின் கோட் படம் உள்ளது. தமிழ்நாட்டில் இப்படம் ரூ. 210 கோடி வசூல் செய்துள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் ரூ. 160 கோடி வசூல் செய்துள்ளது.
மூன்றாவது இடத்தில் ரஜினியின் வேட்டையன் ரூ. 110 கோடி வசூல் செய்துள்ளது. ரூ. 82 கோடி வசூலுடன் ராயன் நான்காவது இடத்தை பிடிக்க, ரூ. 75 கோடியுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது புஷ்பா 2.
இதற்கு அடுத்தடுத்த இடங்களில் அரண்மனை 4 ரூ. 70 கோடி, மஞ்சுமல் பாய்ஸ் ரூ. 63 கோடி, அயலான் ரூ. 58 கோடி, இந்தியன் 2 ரூ. 50 கோடி, மகாராஜா ரூ. 46 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே 2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் விவரங்கள்.
இந்த டாப் 10 பட்டியலில், வெளிமாநில படங்களான புஷ்பா 2 மற்றும் மஞ்சுமல் பாய்ஸ் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.