1990 - 2000 வரை அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ
வசூல்
ஒரு திரைப்படத்தின் வசூலை வைத்துதான் அப்படம் வெற்றியா தோல்வியா என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
அதுவும் இப்போதெல்லாம் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறது என்றால், அந்த படம் ரூ. 1000 கோடி அடிக்குமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.

தயாரிப்பாளர்களும் தற்போது தங்களுடைய படங்களின் வசூல் குறித்து வாராவாரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
1990 - 2000
அவ்வப்போது திரைப்படங்களின் வசூல் சாதனைகளை நினைவுகூரும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 1990ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளன.
இதில் எந்தெந்த திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன, அதில் எந்த ஹீரோவின் படம் அதிகமாக உள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.
1990 - பணக்காரன் - ரூ. 6.25 கோடி
1991 - தளபதி - ரூ. 12.5 கோடி
1992 - அண்ணாமலை - ரூ. 15.6 கோடி
1993 - ஜென்டில் மேன் - ரூ. 12.5 கோடி
1994 - காதலன் - ரூ. 17.5 கோடி

1995 - பாட்ஷா - ரூ. 36.3 கோடி
1996 - இந்தியன் - 58.1 கோடி
1997 - அருணாச்சலம் - ரூ. 31.5 கோடி
1998 - ஜீன்ஸ் - ரூ. 34.8 கோடி
1999 - படையப்பா - ரூ. 60.4 கோடி
2000 - தெனாலி - ரூ. 30.5 கோடி