2024ல் அதிக சம்பளம் வாங்கிய இந்திய சினிமா நடிகர்கள் யார் யார்?.. குட்டி லிஸ்ட் இதோ
நடிகர்கள்
சினிமாவில் ஒரு படத்தின் கதையை தாண்டி அதில் இருக்கும் அனைத்து விஷயங்களும் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது.
இசை, தொழில்நுட்பம், வசனம், பட்ஜெட், நடிகர்களின் சம்பளம் என இப்படி எல்லா விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்ட நிறைய தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது.
அப்படி நாம் இப்போது 2024ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்களின் விவரத்தை காண போகிறோம்.
பிரபாஸ்
கடைசியாக இவரது நடிப்பில் கல்கி 2898 ஏடி படம் வெளியாகி இருந்தது. ஒரு படத்திற்கு ரூ. 200 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
அமீர்கான்
பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிப்பின் நாயகன், ஆனால் சமீபகாலமாக இவரது படங்கள் சரியாக ஓடுவது இல்லை. இப்போது ஆக்டீவாக படங்கள் நடிப்பது இல்லை என்றாலும் ஒரு படத்திற்கு ரூ. 275 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.
ரஜினிகாந்த்
வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் ரூ. 125 முதல் ரூ. 270 கோடி வரை இவரது சம்பளம் செல்கிறது என்கின்றனர்.
ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவின் பாட்ஷாவாக, கிங்காக இருக்கும் ஷாருக்கான் சம்பளம் ரூ. 250 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.
விஜய்
கோட் படத்தில் நடித்து முடித்து தனது 69வது பட வேலைகளில் இருக்கும் விஜய் ரூ. 275 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.
அல்லு அர்ஜுன்
அதிக சம்பளம் பெற்ற நடிகராக விஜய் இருந்த நிலையில் அவரது சாதனையை முறியடிக்கும் வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்திற்காக ரூ. 300 கோடி சம்பளம் பெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.

ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா-தங்கை திருமணம் - ஆனால், இறுதியில் நேர்ந்த சம்பவம்! IBC Tamilnadu
