இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்கள் யார் யார்?.. டாப் 5 லிஸ்ட் இதோ
பாடகர்கள்
என் மனசுக்குள்ள புகுந்து ஏதோ பண்ணுதுங்க அப்படி மக்கள் சொல்லும் அளவிற்கு அவர்களது மனதிற்கு நெருக்கமான பாடல்கள் பாடி ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்கள் பாடகர்கள்.
ஒவ்வொரு குரலுக்கு ரசிகர்கள் உள்ளார்கள், ஒரு பாடல் ஹிட் ஆகிறது என்றால் அதில் பாடகர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது.
அப்படி நாம் இப்போது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபல பாடகர்களின் விவரத்தை காண்போம்.
5. சோனு நிகம்
பாடகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், நடிகர் என பன்முகம் கொண்ட இவர் 6000 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
ஹிந்தி, கன்னடம், பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், ஒடியா, ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி, போஜ்புரி, நேபாளி, துலு என 32 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளாராம்.
இந்திய சினிமா பாடகர்களில் டாப்பில் இருக்கும் இவர் ஒரு பாடல் பாட ரூ. 80 லட்சம் வரை வாங்குகிறாராம்.
4. அர்ஜித் சிங்
காதலர்களின் பேவரெட் பாடகராக இப்போது வலம் வருபவர். மிகவும் பிரபலமான பாடகர்களில் இவரும் ஒருவர். இவர் ஒரு பாடலுக்கு 18 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை வாங்குகிறாராம்.
3. சுனிதி சௌஹான்
Vocal Rangeல் பிரபலமான இவர் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். ஒரு பாடலுக்கு ரூ. 18 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை வாங்குகிறாராம்.
2.ஸ்ரேயா கோஷல்
இவருக்கு ஒரு அறிமுகம் வேண்டுமா என்ன, ஹிந்தி மொழியை முதல் என்றாலும் இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்த ஒரு பாடகியாக வலம் வருகிறார். இவர் ஒரு பாடலுக்கு ரூ. 25 லட்சம் சம்பளம் பெறுகிறார்.
1. ஏ.ஆர்.ரகுமான்
இந்திய சினிமாவின் மிகவும் விலையுயர்ந்த பாடகியாக வலம் வருபவர். இவர் ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.