2023ல் அதிகம் லாபம் கொடுத்த தமிழ் திரைப்படங்கள்.. நம்பர் 1 என நிரூபித்த ரஜினி
தமிழ் சினிமா 2023
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் நல்ல லாபத்தை கொடுத்த திரைப்படங்கள் குறித்து தான் தற்போது பார்க்கவிருக்கிறோம்.
இது முழுக்க முழுக்க தமிழக மட்டுமே வசூல் மூலம் வந்த லாபம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் செய்த வசூல் மூலம் வந்த லாபம் குறித்து இதில் சொல்லவில்லை.
தமிழ்நாட்டில் அதிக லாபம் கொடுத்த படங்கள்
முதலில் ரஜினியின் ஜெயிலர் தமிழக திரையரங்க உரிமை ரூ. 60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ. 97 கோடிக்கும் மேல் ஷேர் செய்து சுமார் ரூ. 37 கோடி லாபத்தை கொடுத்தது.
அஜித்தின் துணிவு தமிழத்தில் ரூ. 54 கோடிக்கு விற்கப்பட்டு 68 கோடி வரை ஷேர் செய்தது. இதன்மூலம் ரூ. 14 கோடி லாபம் கிடைத்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரனின் மார்க் ஆண்டனி ரூ. 15 கோடிக்கு விற்பனைசெய்யப்பட்டு, ரூ. 35 கோடி வரை ஷேர் செய்தது. இதன்மூலம் ரூ. 20 கோடி லாபம் கிடைத்தது.
மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் ரூ. 15 கோடி விற்பனையாகி, ரூ. 30 கோடி ஷேர் செய்து, இதில் ரூ. 15 கோடி லாபத்தை கொடுத்துள்ளது.
விஜய்யின் வாரிசு ரூ. 70 கோடிக்கும் தமிழகத்தில் விற்பனை ஆனது. ரூ. 71 கோடி ஷேர் செய்த நிலையில், வெறும் ரூ. 1 கோடி மட்டுமே லாபம் கிடைத்தது. மேலும் அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ ரூ. 98 கோடிக்கு தமிழகத்தில் விற்கப்பட்டது. ரூ. 101 கோடி வர ஷேர் செய்து ரூ. 3 கோடி லாபமாக கிடைத்துள்ளது.
இதுமட்டுமின்றி சூரி முதல் முறையாக கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை முதல் பாகம் ரூ. 5 கோடி லாபம் கொடுத்துள்ளது.
இந்த படங்களை தவிர்த்து, டாடா, குட் நைட், அயோத்தி, பார்க்கிங், இறுக்கப்பற்று, போர் தொழில், சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களை நல்ல லாபத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.