அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா?
வருமான வரி
அனைத்து குடிமகன்களுக்கும் அவரவர் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்துவது கடமையாகும். இதில் கோடிகளில் வருமானத்தை ஈட்டி வரும் திரையுலக பிரபலங்களும் தங்களது ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப வரியை செலுத்துவார்கள்.

அப்படி நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரைப்பிரபலன்களில் டாப் பத்து இடங்களில் யார்யார் இருக்கிறார்கள், அவர்கள் எவ்வளவு வரி செலுத்தியுள்ளனர் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
டாப் 10 லிஸ்ட்
பாலிவுட் சினிமாவில் அனைவராலும் கிங் கான் என அழைக்கப்பட்டு வருபவர் ஷாருக்கான். இவர் நடப்பு ஆண்டில் ரூ. 92 கோடி வரி செலுத்தி முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வரும் தளபதி விஜய் இருக்கிறார். இவர் ரூ. 80 கோடி வரி செலுத்தி உள்ளார்.

ரூ. 75 கோடி வருமான வரி செலுத்தி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் பாலிவுட் ஹீரோ சல்மான் கான்.

50 ஆண்டுகளை கடந்தும் பாலிவுட்டில் சினிமாவில் நிலைத்து நிற்கும் நடிகராக உள்ளார் அமிதாப் பச்சன். இவர் ரூ. 71 கோடி வரி செலுத்தி நான்காவது இடத்தில் உள்ளார்.

ஐந்தாவது இடத்திலும் பாலிவுட் ஹீரோதான் உள்ளார். நடிகர் அஜய் தேவ்கன் ரூ. 42 கோடி வருமான வரி செலுத்தி உள்ளார்.

ரூ. 36 கோடி வருமான வரி செலுத்தியுள்ள நடிகர் ரன்பீர் கபூர் ஆறாவது இடத்தில் உள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி இன்று முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருக்கும் ஹ்ரித்திக் ரோஷன் ரூ. 42 கோடி வருமான வரி செலுத்தி வருகிறார்.

பாலிவுட் பிரபலமான கபில் ஷர்மா எட்டாவது இடத்தில் உள்ளார். இவர் ரூ. 26 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார்.

இந்த டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்துள்ள ஒரே நடிகை கரீனா கபூர். இவர் ரூ. 20 கோடி வருமான வரியாக செலுத்தி இருக்கிறார்.

இந்த லிஸ்டில் கடைசி இடத்தை பிடித்துள்ள நடிகர் ஷாஹித் கபூர், நடப்பு நிதியாண்டில் ரூ. 14 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார்.
