மலையாள சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நாயகிகளின் விவரம்... டாப்பில் இருப்பது யார்?
சினிமாவில் எல்லா துறைகளிலும் பெண்களும் சாதனை புரிந்துவருகிறார்கள்.
நாயகர்களுக்கு இணையாக படங்கள் நடித்து, சம்பளத்திலும் உயர்ந்துள்ளனர். அதிலும் மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை, அங்கிருந்து தமிழ் பக்கம் வந்த நடிகைகளும் பலர் உள்ளனர்.
அப்படி மலையாள சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் லிஸ்ட் காண்போம்.
மஞ்சு வாரியர்
மலையாள சினிமாவில் மிகவும் வெற்றிகரமான படங்களை கொடுத்து அசத்து வருபவர். இவர் தமிழில் கடைசியாக ரஜினியுடன் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்திருந்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
பார்வதி திருவோத்து
சும்மா காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து சம்பளம் பெற்றோம் என்றில்லாமல் தனது நடிப்பு திறமைக்கு தீனிபோடும் விதமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தயாரிப்பாளரின் கஷ்டங்களை உணர்ந்து, அவர்களுக்கு ஏற்ற போல் தன்னுடைய படத்தின் சம்பளத்தை நிணயிக்கிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ. 35 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
அமலாபால்
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் நடித்து அசத்தும் அமலாபால் நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் படம் வெளியாகி இருந்தது. ரூ. 1 கோடி முதல் இவர் படங்களுக்கு தற்போது சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
சம்யுக்தா மேனன்
சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிய இவர் ரூ. 70 லட்சம் வரை சம்பளம் பெறுகிறாராம்.
ஐஸ்வர்யா லட்சுமி
மலையாள சினிமாவின் இளம் நாயகியான இவர் தமிழ் பக்கம் வந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் ஒரு படத்திற்கு ரூ. 35 லட்சும் முதல் ரூ. 50 லட்சம் வரை சம்பளம் பெறுகிறாராம்.