இதயத்தை திருடாதே சீரியல் புகழ் நடிகை ஹீமா பிந்து ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி- என்ன தெரியுமா?
நடிகை ஹீமா பிந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடரில் நடித்து வருபவர். இவர் மற்றும் நவீன் ஜோடியாக நடிக்கும் இந்த தொடர் ரசிகர்கள் இவர்களின் ஜோடியை மிகவும் ரசித்துள்ளார்கள்.
முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமும் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் பாகம் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இப்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நவீன் திருமணம்
இவர்களது ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட இருவரும் நிஜத்தில் திருமணம் செய்வார்கள் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நவீன் செய்தி வாசிப்பாளர் கண்மணியை திருமணம் செய்துகொள்ள இருக்கும் செய்தி கடந்த சில வாரங்களுக்கு முன் வந்தது.
இதனால் நவீன்-ஹீமா பிந்து இவர்கள் நிஜத்தில் இணையவில்லையா என வருத்தப்பட்டார்கள்.
ஹீமாவின் அதிரடி முடிவு
இந்த நேரத்தில் இதயத்தை திருடாதே ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி வந்துள்ளது. அதாவது நடிகை ஹீமா பிந்து இதயத்தை திருடாதே தொடரில் இருந்து விலகியுள்ளாராம்.
இது ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்திருக்கிறது.