இலக்கியா சீரியலில் இருந்து வெளியேறியது ஏன்?- ஓபனாக கூறிய நடிகை ஹீமா பிந்து
இலக்கியா சீரியல்
சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.இதில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட சீரியல் என்றால் அது இலக்கியா தான்.
இந்த தொடரில் சித்தி 2 சீரியல் புகழ் நந்தன் லோகநாதன், ஹீமா பிந்து, ரூபஸ்ரீ, மீனா வேம்புரி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதில் நாயகியாக நடித்துவரும் ஹீமா பிந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே மூலம் பிரபலம் ஆனவர்.
அந்த தொடர் ஹீமா பிந்துவிற்கு பெரிய ரீச் கொடுக்க அதன்மூலம் வந்த வாய்ப்பு தான் சன் டிவியின் இலக்கியா தொடர். தற்போது இந்த தொடரில் இருந்து விலகுவதாக ஹீமா பிந்து அண்மையில் அறிவித்துள்ளார்.
காரணம் என்ன
என்னுடைய சக நடிகர்கள், ரசிகர்கள் எனக்குக் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் என்றே நன்றி கடன் பட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கனத்த இதயத்துடன் இலக்கியா சீரியலை விட்டு விலகுவதாக முடிவு எடுத்துள்ளேன்.
என்னுடைய இந்த முடிவு உங்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததால் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இதனால் நீங்கள் வருத்தப்படாதீர்கள்.
என்னையும் மீறிய சில சூழ்நிலைகள் மற்றும் காரணங்களால் நான் இந்த சீரியலை விட்டு விலகுகிறேன் என பெரிய பதிவு போட்டுள்ளார்.