இசைக் கச்சேரிகள் மூலமாகவே ஹிட்ஹாப் ஆதி இத்தனை கோடி சம்பாதித்துள்ளாரா?... அடேங்கப்பா
ஹிப்ஹாப் ஆதி
தமிழ் சினிமாவில் ஒரு துறையில் களமிறங்குபவர்கள் பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் எல்லா விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அதிலும் இப்போது உள்ள இசையமைப்பாளர் பலருமே நாயகர்களாக களமிறங்கி கலக்கி வருகிறார்கள். அந்த லிஸ்டில் ராப் பாடகராக தமிழ் சினிமாவில் நுழைத்து பின் இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி.

ஹிப்ஹாப் ஆதி மக்களிடம் அதிகம் கவனம் பெற்றது அவர் இயக்கி, நடித்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் தான்.
இசைக் கச்சேரி
ஹிப்ஹாப் ஆதி, நடிப்பு, இசையமைப்பது போன்ற விஷயங்களை தாண்டி இப்போது அதிகம் இசைக் கச்சேரிகளில் தான் ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், திரைப்படங்களை விட தான் இசைக் கச்சேரிகளில் அதிகம் சம்பாதிப்பதாக கூறியுள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டில் இசை நிகழ்ச்சிகள் மூலமாக அவர் ரூ.160 கோடி வரை சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
