டைட்டில் வின்னர் முத்துக்குமரனுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னணி சினிமா பிரபலம்.. வீடியோ இதோ
முத்துக்குமரன்
பிக் பாஸ் 8 டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற முத்துக்குமரனுக்கு ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இவருடைய வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள். சில விமர்சனங்களும் எழுந்தது. பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொடர்ந்து பிபி கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் நேற்று ஒளிபரப்பாக இதில், பல விஷயங்கள் சுவாரஸ்யமாக நடைபெற்றது.
முன்னணி பிரபலம்
அதில் முத்துக்குமரனை வாழ்த்துவதற்காக நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி வீடியோ காலில் வந்திருந்தார். ஆம், பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துகுமரனை வாழ்த்திய ஹிப் ஹாப் ஆதி, அவருடைய தமிழ் பேசும் விதம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார்.
மேலும் அவருடன் கலந்துரையாடியது குறித்தும் அதில் தெரிவித்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Hip Hop Tamizha 🥳Adhi Anna wishing Muthu in the event of BB Kondaattam From Online Bites . Ragavendran , Karthik Raja and Narmada contestant of the Oratory Skill show for Tamil Pechu ❤️engal Moochu gifted 🎤Microphone statue For Muthu #BiggBossTamil8 #BiggBossTamil #Muthukumaran pic.twitter.com/Ff9x7hKRJq
— Agira Nitesh தமிழன் (@NiteshThoughts) February 9, 2025