ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஹிட் 3
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
இவர் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த திரைப்படம் ஹிட் 3. இயக்குநர் சைலேஷ் கோணலு இயக்கத்தில் உருவான இப்படத்தில் நானி உடன் இணைந்து நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். மேலும் நடிகர் கார்த்தி இப்படத்தில் கேமியோ ரோலில் எண்ட்ரி கொடுத்து திரையரங்கை தெரிகிவிட்டார்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள ஹிட் 3 திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் சக்கப்போடு போட்டு வருகிறது.
வசூல் விவரம்
இந்த நிலையில் நான்கு நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது. அதன்படி, நானியின் ஹிட் 3 திரைப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 101 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
