வசூல் வேட்டை நடத்தும் ராதிகாவின் தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளிவந்த தகவல்

Report

தாய் கிழவி

நடிகராக தன்னை அடையாளப்படுத்தி வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும் களமிறங்கி சாதித்து வருகிறார்.

கடைசியாக அவர் தனது SK புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் தாய் கிழவி என்ற படத்தை தயாரித்தார். அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் அவருடன் பால சரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். கடந்த பிப்ரவரி 27ம் தேதி வெளியான இப்படத்திற்கு நிவாஸ கே.பிரசன்னா இசையமைத்திருந்தார்.

வசூல் வேட்டை நடத்தும் ராதிகாவின் தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளிவந்த தகவல் | Hit Movie Radikaa Sarathkumar Thaai Kizhavi Bo

ஓடிடி ரிலீஸ்

படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் அது ராதிகா நடித்த பவுனுத்தாயி கதாபாத்திரம் தான்.

ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களையும், குடும்ப உணர்வுகளையும் மிக இயல்பாகவும், உணர்ச்சிகரமாகவும் வெளிப்படுத்தியிருக்கும் ஒரு படம். படம் வெளியாகி இதுவரை 75 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

வசூல் வேட்டை நடத்தும் ராதிகாவின் தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளிவந்த தகவல் | Hit Movie Radikaa Sarathkumar Thaai Kizhavi Bo

இந்த நிலையில் தான் தாய் கிழவி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Jio Hotstar நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். வரும் மார்ச் 26ம் தேதி இப்படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US