ஜீ தமிழில் முடிவுக்கு வரும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய ஹிட் சீரியல்.. ரசிகர்கள் வருத்தம்
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ்.
ஆரம்பத்தில் சில சீரியல்கள் மூலம் மக்களை கவர்ந்தாலும் இப்போது சூப்பரான ரியாலிட்டி ஷோக்கள் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
சமீபத்தில் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சரிகமப நிகழ்ச்சி பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி முடிந்தது.
முடியும் தொடர்
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடர் முடிவுக்கு வரும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட வள்ளியின் வேலன் தொடர் தான் முடிய உள்ளதாம்.
இந்த தொடர் 200 எபிசோடுகளை எட்டியுள்ளது.
இதில் திருமணம் தொடர் மூலம் முதன்முறையாக ஜோடியாக நடித்து பின் நிஜத்திலும் ரியல் ஜோடியாக இணைந்த சித்து மற்றும் ஸ்ரேயா தான் இதில் முன்னணி ஜோடியாக நடித்தார்கள்,
வள்ளியின் வேலன் சீரியல் கிளைமேக்ஸ் எட்ட உள்ளது என்ற தகவல் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

எங்கள் பிரிவுக்கு அந்த நபர் மட்டுமே காரணம்; இது திட்டமிட்ட சதி - அதிர்ச்சி கொடுத்த ஆர்த்தி IBC Tamilnadu
