TRPயில் டாப்பில் வரும் சீரியலை திடீரென முடிக்கும் ஜீ தமிழ்... எந்த தொடர் தெரியுமா?
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் டாப்பில் இருக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ்.
ஆரம்பத்தில் இவர்கள் மக்களிடம் ரீச் ஆனது செம்பருத்தி என்ற சீரியல் மூலமாக தான். அந்த தொடர் தமிழ் சின்னத்திரை டிஆர்பில் முதல் இடத்தை எல்லாம் வந்தது. அதன்பின் இந்த தொலைக்காட்சி தொடர்கள் ஒன்றும் டாப் இடத்திற்கு வரவில்லை.
இப்போது சரிகமப, சிங்கிள் பசங்க போன்ற ரியாலிட்டி ஷோக்கள் மூலமாகவும் கவனம் பெற்று வருகிறார்கள்.

கிளைமேக்ஸ்
கடந்த மே 2023ம் ஆண்டு ஜீ தமிழில் தொடங்கப்பட்ட சீரியல் தான் அண்ணா.
தங்கைகளை பாதுகாக்கும் பொறுப்பான அண்ணனாக அவர்களுக்கான விஷயங்கள் செய்வது என வாழும் ஒரு அண்ணனின் கதையை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இந்த சீரியல் நல்ல ஹிட் தான். இப்போது என்ன தகவல் என்றால் 856 எபிசோடுகளை எட்டியுள்ள அண்ணா சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம்.
இந்த தகவல் அண்ணா சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.