தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன விஷயம்.. வருத்தத்திலும் ஷாக்கிலும் ரசிகர்கள்
பிரியங்கா
தொகுப்பாளினி பிரியங்கா, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் பிரபலங்களில் ஒருவர்.
மாகாபாவை போல விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சி எடுத்தாலும் அவர் இவரும் இருக்கிறார், எந்த நிகழ்ச்சி கொடுத்தாலும் அந்நிகழ்ச்சியை நகைச்சுவையாக, கலகலப்பாக கொண்டு செல்வார்.
மாகாபாவுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் சரி, ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி பிரியங்கா தொகுத்து வழங்கும் எல்லா ஷோவும் ஹிட் தான்.

முடிந்த நிகழ்ச்சி
கடந்த மார்ச் 14ம் தேதி பிரியங்கா தொகுத்து வழங்க ஒரு புதிய ஷோ ஒளிபரப்பாக தொடங்கியது. அது என்ன ஷோ என்றால் பிரபலங்கள் தங்களது துணையுடன் பங்குபெற்ற ஷோ தான்.
Happy Wife Happy Life, பிரியங்கா தொகுத்து வழங்க ஒவ்வொரு வாரமும் 3 பிரபலங்கள் தங்களது வாழ்க்கைத் துணையுடன் வந்து கலந்துகொண்டு நிறைய விஷயங்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

முதல் ஷோவிலேயே ரசிகர்களின் ஆதரவு பெறுகியது, அடுத்தடுத்து நிகழ்ச்சி ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த ஷோவை முடித்துள்ளனர். பிரியங்கா கடைசி நிகழ்ச்சியில் இந்த ஷோ முடிந்துவிட்டது என கூறிய விஷயத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளனர்.

பலர் நல்ல ஷோ முடித்திருக்க வேண்டாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri
மெஸ்ஸிக்கு ஒருமுறை இல்லை! FIFA வரலாற்றிலேயே இருமுறை Golden Boot வாங்கிய முதல் வீரர் இவர்தான் News Lankasri