தன்னை விட 30 வயது அதிகமான நடிகருடன் டேட் செய்யும் ஹாலிவுட் நடிகை Ana De Armas... வைரலாகும் போட்டோ
ஹாலிவுட்டில் பிரபலங்களுக்கு காதலிப்பது, டேட்டிங் போவது, லிவிங் டூ கெதர், விவாகரத்து, பிரேக் அப் போன்ற விஷயங்களை எல்லாம் சாதாரணம்.
தற்போது அப்படி ஒரு பிரபலத்தின் காதல் குறித்த தகவல் தான் வைரலாகி வருகிறது.
வைரல் போட்டோ
தற்போது நடிகை அனா டி அர்மாஸ் காதலிக்கும் பிரபலம் குறித்து போட்டோவுடன் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தன்னை விட 30 வயது அதிகமான நடிகரை தான் காதலித்து வருகிறாராம். அவர் யார் என்றால் ஹாலிவுட் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கும் நடிகர் டாம் குரூஸ் தான்.
இவர் யாராலும் செய்ய முடியாத ஸ்டன்ட் காட்சிகள் சாதாரணமாக செய்து முடிப்பவர்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஷன்: இம்பாஸிபிள்- தி பைனல் ரெக்கானிங் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சியின் மூலம் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார் டாம் குரூஸ். தற்போது டாம் குரூஸும், அனாவும் ஒன்றாக சுற்றும் புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.