டயான் கீட்டன்
ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் டயான் கீட்டன். இவருக்கு வயது 79. அமெரிக்காவை சேர்ந்த இவர் 1970ஆம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

தி காட்பாதர் 1&2, அனி ஹால், சம்மர் கேம்ப், ஃபாதர் ஆஃப் தி பிரிட், புக் கிளப் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் அனி ஹால் மற்றும் தி காட்பாதர் படங்களுக்காக நடிகை டயான் கீட்டன் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

மேலும், பல்வேறு படங்களுக்காக எமி விருது, கோல்டன் குளோப் விருது என விருதுகளை வென்று குவித்துள்ளார் நடிகை டயான் கீட்டன்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை, இன்று தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகை! யார் என்று தெரிகிறதா
மரணம்
ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான டயான் கீட்டன் உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். இவருடைய மறைவு பெரும் துயரத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri