ஹாலிவுட் கதாநாயகிக்கு இணையாக டாட்டூவுடன் ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ..
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கிவருபவர், இவர் தொடர்ந்து சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம், மாஸ்டர் என நல்ல திரைப்படங்களை மட்டுமே ஆண்ட்ரியா தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது அவர் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் ஆண்ட்ரியா புதிதாக பதிவிட்டுள்ள போட்டோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஆம் ஆண்ட்ரியா டாட்டூ குத்தியுள்ள போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த போட்டோவிற்கு லைக்ஸ்களை குவித்து வரும் ரசிகர்கள் சிலர் ஆண்ட்ரியாவை ஹாலிவுட் நடிகை Gal Gadot என நினைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.