தமிழ் படங்கள் வசூலை காலி செய்த ஹாலிவுட் படங்கள்.. இப்படி ஒரு மோசமான நிலைமையா
ஹாலிவுட் திரைப்படங்கள்
கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் நல்ல திரைப்படங்கள் வெளிவந்த நிலையிலும், ஹாலிவுட் திரைப்படங்களின் தாக்கம் காரணமாக வசூலில் அடிவாங்கியுள்ளது.
பறந்து போ, 3BHK, Love Marriage, DNA என நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்து வரவேற்பை பெற்றாலும், மாபெரும் அளவில் வசூல் வரவில்லை. அதற்கு காரணம் F1, ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த் மற்றும் சூப்பர்மேன் ஆகிய திரைப்படங்கள் இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் வசூலில் ஆதிக்கம் செய்து வருகின்றன.
பாக்ஸ் ஆபிஸ் விவரம்
கடந்த மாதம் வெளிவந்த F1 திரைப்படம் இதுவரை இந்தியாவில் மட்டுமே ரூ. 66 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல் கடந்த வாரம் திரைக்கு வந்த ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த் இதுவரை ரூ. 68 கோடியும், கடந்த 10ம் தேதி வெளிவந்த சூப்பர்மேன் ரூ. 18 கோடியும் வசூல் செய்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கான வசூல் மாபெரும் அளவில் உள்ளது. மேலும் வருகிற ஜூலை 24ம் தேதி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் Fanstic 4 திரைப்படம் வெளிவரவுள்ளது.
அதே நாளில் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படமும் வெளியாகிறது. அப்போது எப்படிப்பட்ட வரவேற்பு இரு திரைப்படங்களுக்கும் கிடைக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.