98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்..
ஹோம்பவுண்ட்
இயக்குநர் நீரஜ் கய்வான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஹோம்பவுண்ட். இப்படத்தில் ஜான்வி கபூர், விஷால் கட்டர், விஷால் ஜெத்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் இதுவரை திரையரங்கில் வெளிவரவில்லை என்றாலும், சர்வேதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்தன. அதே போல் டொராண்ட்டொ திரைப்பட விழாவிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர்
98வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்த ஆஸ்கர் விருதுக்கு இந்திய சார்பில் ஹோம்பவுண்ட் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஹோம்பவுண்ட் திரைப்படத்தை சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதி பட்டியலில் தேர்வாகியுள்ளது. இதன்பின் இறுதி நாமினேஷன் பட்டியல் ஜனவரி 26ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளிவர உள்ளது.