ஆஸ்கர் 2026: புஷ்பா 2வை பின்னுக்கு தள்ளிய ஜான்வி கபூரின் திரைப்படம்..
ஆஸ்கரில் ஹோம்பவுண்ட்
இயக்குநர் நீரஜ் கய்வானின் ஹோம்பவுண்ட் திரைப்படம் 2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வமான படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜான்வி கபூர், விஷால் கட்டர், விஷால் ஜெத்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் 2026க்கான ஆஸ்கருக்கு இந்திய திரையுலகிற்கு பெருமை என கூறப்படுகிறது.
உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டடு, பாராட்டுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிபோட்ட படங்கள்
இந்தியாவில் இருந்து பல்வேறு படங்கள் ஆஸ்கர் தேர்வுக்காக போட்டிபோட்டன. அதில், புஷ்பா 2, கண்ணப்பா, குபேரா ஆகிய படங்களும் இடம்பெற்று இருந்தது. ஆனால், அந்த படங்களை பின்னுக்கு தள்ளி ஆஸ்கருக்கு ஹோம்பவுண்ட் படம் தேர்வாகியுள்ளது.