Hong Kong Warriors திரை விமர்சனம்
Soi Cheang இயக்கத்தில் Louis Koo, Sammo Hung, Richie Jen, Tony Wu நடிப்பில் தமிழ் டப்-ல் வெளிவந்துள்ள ஹாங்காங் வாரியர்ஸ் எப்படியுள்ளது, பார்ப்போம்.
கதைக்களம்
வால்ட் சிட்டி ஹாங்காங்கில் அமைந்துள்ள ஒரு பழைய பங்களா. அங்கு பல குடும்பங்கள் வாழ்கின்றனர். அந்த நகரம் ஒரு காலத்தில் பல கேங்ஸ்டர் கைகளில் இருக்க, அடிதடி வெட்டு குத்து, சூதாட்டம் நடந்த பகுதி.
அப்போது சைக்லோன் என்பவர் வந்து அனைத்திற்கும் முடிவு கட்டி அந்த இடத்தை நல்வழிபடுத்துகிறார். இப்படத்தின் நாயகன் சான் ஒரு அகதியாக ஹாங்காங் வருகிறார்.
ஒரு கேங்கிடம் ஏற்பட்ட சண்டையால் சான் வால்ட் சிட்டிக்கு வர, அங்கு சைக்லோன் அடைக்களம் தருகிறார். ஆனால் பிறகு தான் தெரிகிறது சைக்லோன் தான் ஹீரோ சான் அவர்களின் அப்பாவை கொன்றது, அந்த குற்ற உணர்சிக்காக சான்-யை காப்பற்றுகிறார்.
அதே நேரத்தில் சான்-யை கொல்ல ஒரு கும்பல் வர, வால்ட் சிட்டிக்கு பெரும் ஆபத்து வருகிறது, இதன் பின் என்ன ஆனது என்பதன் அதிரடி ஆக்ஷனே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஹாங்காங் ஆக்சன் படமாக வந்துள்ள ஹாங்காங் வாரியர்ஸ் ஒரு கேங்ஸ்டர் படைப்பாக உருவாக்கியுள்ளனர். அதே போலவே படம் முழுவதும் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்து செம விருந்து வைத்துள்ளனர்.
மெட்ராஸ் படத்தில் எப்படி ஒரு செவுருக்காக பலரும் அடித்துக்கொள்வார்களோ அதே போல் இதில் வால்ட் சிட்டி என்ற இடத்திற்காக அடிதடி அரசியல் நடக்கிறது.
இதில் ஹீரோ உள்ளே வர அவரால் எப்படி இந்த வால்ட் சிட்டி மீட்கப்படுகிறது என்பதே மூலக்கதை என்றாலும், பல கிளைக்கதைகள் இப்படத்தில் விரிகிறது.
குறிப்பாக ஹீரோ சான் அப்பா, சைக்லோன் எப்படி இங்கு வந்தார்கள் என்பதன் கதை சுவார்ஸ்யம், அதே நேரத்தில் இத்தனை ராவ் ஆன ஒரு ஆக்சன் படத்தில் வில்லனை ஒரு சூப்பர் பவர் உள்ளது போல் காட்டியது அத்தனை சுவாரஸ்யத்தையும் குறைக்கிறது.
படத்தின் மிகப்பெரும் பலம் ஸ்டெண்ட் காட்சிகள் மற்றும் 2000-ல் உள்ள ஹாங்காங்-யை செட்-ல் கொண்டு வந்த விதம்.
க்ளாப்ஸ்
படத்தின் சண்டைக்காட்சிகள்.
டெக்னிக்கல் ஒர்க்
பல்ப்ஸ்
வில்லன் கதாபாத்திரம் சூப்பர் பவர் இல்லாமல் இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் ஆக்சன் விரும்பிகள் ஒரு முறை விசிட் அடிக்கலாம் இந்த ஹாங்காங் வாரியர்ஸுக்கு.
ரேட்டிங்: 2.75/5