Hope: திரை விமர்சனம்

By Tony Oct 23, 2026 09:20 AM GMT
Report

உலகம் முழுவதும் கொரியன் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அந்த வகையில் கொரியன் சென்சேஷன் இயக்குனர் நா-ஹாங் சென்சேஷன் நடிகர் வாங் மின் ஜுன் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த ஹோப் எப்படியுள்ளது? பார்ப்போம்.

Hope: திரை விமர்சனம் | Hope Movie Review

கதைக்களம்

கொரியாவில் ஒரு கிராமத்தில் திடீரென மிகப்பெரிய விபத்துக்கள் நடக்கிறது. படத்தின் நாயகன் போலிஸான வாங் மின் அது என்ன என்று விசாரிக்க செல்கிறார்.

அப்படி சென்ற இடத்தில் இந்த விபத்துக்கெல்லாம் காரணம் ஒரு பெரிய புலி என நினைத்து தேட ஆரம்பிக்க, பிறகு தான் தெரிகிறது, அது புலி இல்லை மனித உருவத்தில் இருக்கும் ஒரு மான்ஸ்டர் என்று.

Hope: திரை விமர்சனம் | Hope Movie Review

அதை தொடர்ந்து அந்த மான்ஸ்டரை துரத்தி பெரிய போராட்டத்தை தாண்டி வேட்டையாட, அதை பிடித்து ஆராய்ச்சி செய்கிறனர்.

ஆனால், அதே நேரத்தில் இருப்பது ஒன்று இல்லை, நிறைய மான்ஸ்டர் என தெரிய வர, பிறகு என்ன ஆனது என்பதன் பரபரப்பே மீதிக்கதை.

Hope: திரை விமர்சனம் | Hope Movie Review

படத்தை பற்றிய அலசல்

நாயகன் வாங் மின் ஜின் இவர் நடித்தாலே அது தன்னித்துவமான படமாக தான் இருக்கும் என்பதற்கு மற்றும் ஒரு படைப்பு தான் இந்த ஹோப், மனுஷன் பரபரப்பை அப்படியே நம்மிடம் கடத்துகிறார், ஏதோ நாயகன் என்றால் தனி ஆளாக அடித்து தும்சம் செய்யாமல் ஒரு சாமனியன் போல் அவர் பயந்து நடுங்குவது, தப்பித்து உயிருக்கு பயந்து ஓடுவது, ஒரு கட்டத்தில் அதை சுட்டே தீர வேண்டும் என துரத்துவது என வாங் கெரியரில் மற்றும் ஒரு சிறந்த ரோல் தான்.

நாயகி கொஞ்சம் விளையாட்டாக இருந்தாலும், தைரியமாக அவர் செய்யும் விஷயங்கள் செம, அதே நேரத்தில் படத்தின் முதல் பாதி, 45 நிமிடங்களுக்கு மேலாக அந்த மான்ஸ்டரை காட்டாமல் நாயகன் பதட்டத்தை ஆடியன்ஸிடம் கடத்தி நகர்த்தி சென்றது இயக்குனர் நா-ஹாங் மாஸ்டர் ஸ்டோக்.

Hope: திரை விமர்சனம் | Hope Movie Review

ஹைக்கூ: திரை விமர்சனம்

ஹைக்கூ: திரை விமர்சனம்

மேலும் படத்தின் சண்டை காட்சிகள் பிரமாதம், அதிலும் முதல் மான்ஸ்டரை கொல்ல நாயகன், நாயகி காரில் துரத்தும் காட்சி எட் ஆப் தி சீட் தான். அதை தொடர்ந்து இந்த மான்ஸ்டர் என்ன, எப்படி இங்கு வந்தது, என இரண்டாம் பாதியில் பல கேள்விகளுக்கான விடை வருகிறது, அவை அனைத்தும் ஆடியன்ஸுக்கு காட்டிய விதம் ரசிக்க வைக்கிறது.

படத்தில் இப்படி பல ப்ளஸ் இருந்தாலும் உயிர் போகும் நேரத்தில் பதட்டத்தை விட, டார்க் காமெடியை இயக்குனர் பல இடங்களில் வைத்தது, பதட்டத்திலிருந்து கொஞ்சம் விலக வைக்கிறது.

Hope: திரை விமர்சனம் | Hope Movie Review

அதோடு இரண்டாம் பாதி யார் இவர்கள், எதற்காக இங்கு வந்தார்கள் என்ற விவரம் இரண்டாம் பாகம் என்பது போல் காட்டியது, கொஞ்சம் ஏமாற்றமாகவே உள்ளது, ஏனெனில் ஆல்மோஸ்ட் முடியும் படத்திற்கு லீட் ஏன் என்று, அதோடு கொரியன் படங்களுக்கான வலுவான எமோஷ்னல் விஷயங்கள் இது மிக குறைவு.

படத்தின் மிகப்பெரிய பலம் இசை, ஒளிப்பதிவு, அத்தனை அழகாக உள்ளது, சிஜி ஒர்க் ஹாலிவுட் அளவிற்கு இல்லை என்றாலும் ஓகே ரகம்.

க்ளாப்ஸ்

  • நடிகர்கள், நடிகைகள் பங்களிப்பு
  • டெக்னிக்கல் ஒர்க்
  • ஸ்டெண்ட் காட்சிகள்.

பல்ப்ஸ்

  • எமோஷ்னல் காட்சிகள் என்பதே படத்தில் இல்லாமல் போனது.
  • சொல்ல வந்த விஷயத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம்.

மொத்ததில் இந்த ஹோப் மான்ஸ்டர், சேசிங். சண்டை என எதிர்பார்த்து போனால் கண்டிப்பாக ஏமாற்றம் இருக்காது, அதே நேரத்தில் அசந்து பார்க்கவும் ஏதுமில்லை.

Hope: திரை விமர்சனம் | Hope Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US