அதிரவைக்கும் திருப்பங்களுடன், பரபரப்புக்கும் வேகத்தில் ஹார்ட் பீட் சீரிஸ் !!

By Kathick Mar 19, 2024 10:16 AM GMT
Report

வாரவாரம் சர்ப்ரைஸ் , ரசிகர்களின் உற்சாக வரவேற்பில், ஹார்ட் பீட் சீரிஸ் !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், , ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் 'ஹார்ட் பீட்' சீரிஸை, மார்ச் 8 முதல் வாராவாரம் வெள்ளிக்கிழமையில் நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பி வருகிறது.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், , ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் 'ஹார்ட் பீட்' சீரிஸை, மார்ச் 8 முதல் வாராவாரம் வெள்ளிக்கிழமையில் நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பி வருகிறது.

ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை வழங்கி வருகிறது இந்த சீரிஸ்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில், நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரிஸில், கடந்த வார இறுதி எபிஸோடில், ரீனா, மருத்துவர் ரதியின் மகள் எனும், ரசிகர்கள் எதிர்பாராத அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது. இந்த ஆச்சரியமான டிவிஸ்ட், அடுத்த வார எபிஸோடை நோக்கி, ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

இனி என்ன நடக்கும், உண்மை தெரிய வரும்போது ரதி என்ன செய்வார்?, ஏன் ரதி ரீனாவை ஒதுக்கி வைத்தார். ரதியின் குடும்பத்தில் ரீனா இணைவாரா ? இந்த கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள, ஒவ்வொரு வாரமும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் 'ஹார்ட் பீட்' சீரிஸை தவறாமல் பாருங்கள்.

இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது, இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US