நம்மில் ஒரு ஆள் தான் அடுத்த வார கேப்டன்.. திட்டம் போடும் ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்.. ப்ரோமோ வீடியோ
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 7ல் இரண்டாவது வாரம் முதல் நாளில் இருந்தே கடுமையான வாக்குவாதங்கள் ஆரம்பித்துவிட்டது.
குறிப்பாக இன்று பிக் பாஸ் வீட்டினருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
அதுவும் சாப்பாட்டு விஷத்தில் இந்த மோதல் ஏற்படுவதால் பரபரப்பாகியுள்ளது வீடு. இவர்களுக்கு இடையில் கேப்டன் விக்ரம் சற்று தலைசுற்றி நிற்கிறார்.
திட்டம் போடும் ஹவுஸ் மேட்ஸ்
இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டினரை நாம் கடுப்பேற்றி விட்டோம்.
இதனால் நம் மீது கடுப்பில் இருக்கும் அவர்களில் ஒருவர் அடுத்த வாரம் கேப்டன் ஆனால், நாம் ஆறு பேர் தான் மீண்டும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு வருவோம்.
ஆகையால், நம் ஆறு பேரில் ஒருவர் தான் அடுத்த வாரம் பிக் பாஸ் கேப்டன் ஆகவேண்டும் என திட்டம் போடுகிறார்கள். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..