தனுஷுக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது? அவரே சொன்ன பதில்
நடிகர் தனுஷ் இதுவரை தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்து ஹாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார். அவர் நடிக்கும் க்ரே மேன் படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பிரம்மாண்ட ஹாலிவுட் படத்தில் தனுஷும் ஒரு பங்காக இருப்பதை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் தற்போது மீடியாவுக்கு க்ரே மேன் படம் திரையிடப்பட்டு இருக்கிறது. அந்த ஷோவில் தனுஷும் கலந்துகொண்டார். அப்போது தனுஷ் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இந்த படத்திற்குள் எப்படி வந்தீர்கள் என தொகுப்பாளர் கேட்க, "எப்படி வந்தேன் என எனக்கும் தெரியவில்லை" என காமெடியாக பதில் கூறினார்.
"ஒரு நாள் casting ஏஜென்சியில் இருந்து என்னிடம் பேசினார்கள். ஒரு ஹாலிவுட் படம் இருக்கிறது நடிக்கிறீர்களா என கேட்டார்கள். அது என்ன படம் என முதலில் சொல்லுங்கள் என கேட்டேன். அது பெரிய படம், முதலில் நடிக்கிறீர்களா இல்லையா என பதில் கூறுங்கள் என கேட்டார்கள்."
"விவரங்கள் கேட்டு எனக்கும் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன்" என தனுஷ் தெரிவித்தார்.
"எனக்கு படத்தில் அதிகம் screentime இல்லை, இருந்தாலும் எனக்கு த்ரில்லிங் ஆக இருக்கிறது. இப்படி ஒரு வாய்ப்புக்காக தான் காத்திருந்தேன். நான் சிறப்பாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன்" எனவும் கூறி இருக்கிறார்.
Dhanush (@dhanushkraja) very gracious to be involved in #TheGrayMan pic.twitter.com/7nf5nt6E8p
— Courtney Howard (@Lulamaybelle) July 11, 2022