விளம்பரத்தில் நடிக்க சினேகா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா! ஒரு நாளைக்கு இவ்வளவா!
நடிகை சினேகா அன்று முதல் இன்று வரை தன் அழகான சிரிப்பினால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர். நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு ஃபுல் டைம் ஃபேமிலி பெண்ணாக சில காலம் இருந்து வந்தார்.
அவருக்கு விசாகன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தான். அவன் தற்போது வளர்ந்த பையனாகவிட்டான். அப்பா பிரசன்னாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவில் அவனை சமூக வலைதளத்தில் காணலாம்.
இரண்டாம் குழந்தை கர்ப்பமாக இருந்த போதே சினேகா சினிமாவுக்கு மீண்டும் நடிக்க வந்தார். தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்த சமயத்தில் அவர் கர்ப்பமாக தான் இருந்தார்.
பின் பெண் குழந்தையும் பிறந்தது. விளம்பரங்களில் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் நடிக்கிறார்கள்.
நடிகை சினேகா விளம்பர படங்களில் அதிகம் நடிப்பவர். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ 2 லட்சம் சம்பளமாக பெறுகிறாராம்.