ஹிருதயபூர்வம்: திரை விமர்சனம்

By Sivaraj Aug 29, 2025 07:00 AM GMT
Report

மோகன்லால், மாளவிகா மோகன் நடிப்பில் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள "ஹிருதயபூர்வம்" மலையாள திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.

ஹிருதயபூர்வம்: திரை விமர்சனம் | Hridayapoorvam Movie Review

கதைக்களம்

கிளௌட் கிச்சன் நடத்தி வரும் சந்தீப் பாலகிருஷ்ணனுக்கு (மோகன்லால்) இருதயத்தில் பிரச்சனை இருப்பதால், ரவீந்திரநாத் என்பவரது இருதயம் அவருக்கு பொருத்தப்படுகிறது. அதன்பின்னர் ஹரிதா (மாளவிகா மோகனன்) புனேவில் இருந்து சந்தீப்பை காண வருகிறார்.

தனது அப்பாவின் இருதயம்தான் உங்களுக்கு பொருத்தப்பட்டிருக்கிறது என்று கூறும் ஹரிதா, தனது திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்ள சந்தீப்பை அழைக்கிறார்.

ஹிருதயபூர்வம்: திரை விமர்சனம் | Hridayapoorvam Movie Review

முதலில் மறுக்கும் சந்தீப் பின் சென்டிமெண்டாக ஹரிதா கேட்க, தன்னை கவனித்துக் கொள்ள இருக்கும் ஜெர்ரியுடன் (சங்கீத் பிரதாப்) புனேவுக்கு கிளம்புகிறார். அங்கு எதிர்பாராத விதமாக ஹரிதா திருமணம் நடக்காது என்று அறிவிக்க, மாப்பிள்ளையின் நண்பர்கள் கலாட்டா செய்கிறார்கள்.

அதனை தடுக்க செல்லும் சந்தீப்பிற்கு பலத்த அடிபடவே, இரண்டு வாரங்கள் புனேயில் ஹரிதாவின் வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஹரிதாவின் வீட்டில் தங்கும் சந்தீப்பிற்கு அவர் மீது ஈர்ப்பு வர அதன் பின்னர் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.  

ஹிருதயபூர்வம்: திரை விமர்சனம் | Hridayapoorvam Movie Review

படம் பற்றிய அலசல்

சந்தீப் எனும் கேரக்டரில் நடித்திருக்கும் மோகன்லால் அமைதியான நடிப்பை சிறப்பாக தந்திருக்கிறார். மாளவிகா மோகனன் உடன் பழகும்போது அவர் மீதான விருப்பத்தை காட்டியும் காட்டாமலும் தயங்கும் இடங்களில் மோகன்லால் மிரட்டியிருக்கிறார்.

அதேபோல் 'பூவே உனக்காக' சங்கீதாவிடம் அவர் பேசும் காட்சிகளிலும் அழகாக உணர்வுகளை கடத்துகிறார். படம் முழுக்க அழகு பதுமையாக வரும் மாளவிகா, தன் அப்பாவை நினைத்து உருகும் முதல் காட்சி தொடங்கி, மோகன்லால் மீது சாய்ந்து அழும் காட்சி என நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஹிருதயபூர்வம்: திரை விமர்சனம் | Hridayapoorvam Movie Review

எமோஷனல் டிராமா கதை சுவாரஸ்யமாக நகர, சங்கீத் பிரதாப்பின் டைமிங் காமெடி பெரிதும் உதவியிருக்கிறது. அவர் பல காட்சிகளில் சீனியர் நடிகர் என்றும் பாராமல் மோகன்லாலை கலாய்ப்பது சிரிப்பலை.

குறிப்பாக சங்கீதா, மாளவிகா இருவரில் யார் என்று அவர் கேட்கும் டைமிங் பிளாஸ்ட். சித்திக், பாபுராஜ், லாலு அலெக்ஸ் ஆகியோர் தங்களது கேரக்டரை சிறப்பாக செய்திருக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.

ஹிருதயபூர்வம்: திரை விமர்சனம் | Hridayapoorvam Movie Review

Lokah: Chapter 1- Chandra திரை விமர்சனம்

Lokah: Chapter 1- Chandra திரை விமர்சனம்

எமோஷனல் காட்சிகள் நம்மை ஆட்கொள்ளும் அளவிற்கு இசை மூலம் அவர் கடத்தியிருக்கிறார். மனித உணர்வுகளை அழகாக காட்சிகளில் நேர்த்தியாக கடத்துவதில் வல்லவரான இயக்குநர் சத்யன் அந்திக்காடு இம்முறையும் அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

கே.ராஜகோபாலின் படத்தொகுப்பு, சோனுவின் திரைக்கதை, அனு மூதேடத்தின் ஒளிப்பதிவு ஆகிய அனைத்தும் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. இரண்டாம் பாதியிலும், கிளைமேக்சிலும் சர்ப்ரைஸாக இருவர் கேமியோ செய்திருக்கிறார்கள்.  

ஹிருதயபூர்வம்: திரை விமர்சனம் | Hridayapoorvam Movie Review

க்ளாப்ஸ்

மோகன்லால்

கதை,  திரைக்கதை

பின்னணி இசை

காமெடி

பல்ப்ஸ்

படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்

மொத்தத்தில் மனித உணர்வுகளை அழகாக கடத்தி நம்மை ஆட்கொள்வதில் வெற்றி பெற்றுள்ளது இந்த "ஹிருதயபூர்வம்". கண்டிப்பாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம். 

ஹிருதயபூர்வம்: திரை விமர்சனம் | Hridayapoorvam Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US