மேடையிலேயே திடீரென ரசிகரின் காலில் விழுந்த நடிகர் ரித்திக் ரோஷன்- வைரலான வீடியோ
நடிகர் ஹிருத்திக் ரோஷன்
நடிகர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஸ்பெஷல் விஷயங்கள் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள். அப்படி பாலிவுட் சினிமாவில் நடனத்திற்காக பெரிய அளவில் கொண்டாடப்படும் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.
1980ம் ஆண்டு ஆஷா என்ற திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஹிருத்திக். அதன்பிறகு தொடர்ந்து ஒரு 45 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
விக்ரம் வேதா என்ற திரைப்படம் ஹிருத்திக் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது. புஷ்கர்-காயத்ரி இயக்கிய தமிழ் படமாக விக்ரம் வேதா படத்தின் ரீமேக் இது. விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் நடிக்க மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலிகான் நடித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
நிகழ்ச்சி மேடை
அண்மையில் ஒரு நிகழ்ச்சி ஹிருத்திக் கலந்து கொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் நடிகருடன் ஒரு ரசிகர் புகைப்படம் எடுத்ததுடன் திடீரென அவரது காலில் விழுந்துவிட்டார். இதனை எதிர்ப்பாராத ஹிருத்திக் பதறியதுடன் உடனே தனது ரசிகர் காலில் அவரும் விழுந்துவிட்டார்.
இதைக்கண்ட ரசிகர்கள் இப்படி ஒரு நடிகரா என புகழ்ந்து வருகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் குமரனின் நிஜ மகனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
