திருமணம் குறித்து பேசிய வலிமை பட நடிகை.. காதல் முறிவுக்கு பின் இப்படியொரு முடிவா
ஹுமா குரேஷி
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஹுமா குரேஷி. இவர் ரஜினியின் காலா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின் கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஹுமா குரேஷி 36 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
திருமணம் எப்போது
இந்நிலையில், திருமணம் குறித்து பேசிய நடிகை ஹுமா குரேஷி, "ஹிந்தி பிரபலங்கள் பலர் திருமணம் செய்து வருவதால் எனக்கு எப்போது திருமணம் என கேள்வி எழுந்துள்ளது. நான் திருமணத்திற்காக அவசரப்படவில்லை. சரியான நபருக்காக நான் காத்திருக்கிறேன். அப்படி ஒருவரை நான் சந்தித்தால் கண்டிப்பாக அவரை திருமணம் செய்துகொள்வேன்" என கூறியுள்ளார்.
நடிகை ஹுமா குரேஷிக்கு கடந்த சில மாதங்களுக்கு தான் காதல் முறிவு ஏற்பட்டது. பிரபல எழுத்தாளர் முடாசர் அஸீஸ் என்பவரை காதலித்து வந்த நடிகை ஹுமா குரேஷிக்கு திடீரென காதல் முறிவு ஏற்பட்டது என தகவல் வெளியானது.
இந்த காதல் முறிவுக்கு பின்பும் கூட இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
படையப்பா படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததா கில்லி.. உண்மை இதுதான்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
