அஜித்தின் பிளாப் படத்தில் வலிமை பட நாயகி ! பல வருடங்களுக்கு முன் அவர் நிகரித்த வாய்ப்பு..
நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் நாளை உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
இப்படத்தின் முன்பதிவிற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்தே முதல் நாள் வசூல் பெரியளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே வலிமை படத்தில் அஜித்துடன் நடித்துள்ள நடிகை ஹூமா குரேஷி, இப்படத்தில் அவர் கதாநாயகியாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை ஹூமா குரேஷி வலிமை படம் குறித்து பேட்டி அளிக்கையில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதன்படி நடிகர் அஜித் குறித்து அவர் சொன்னதாவது "முன்னதாக பில்லா 2 படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது, ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை.
வலிமை படத்திற்கான அழைப்பு வந்தபோது, நான் இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவருடன் திரையைப் பகிரப் போகிறேன் என்பது, எனக்கு மிகப்பெரும் உற்சாகத்தை தந்தது.
வலிமை படத்தில் அஜித்குமார் சாருடன் இணைந்து நான் நிறைய காட்சிகளில் வருகிறேன், எங்கள் காட்சிகளை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்" என தெரிவித்துள்ளார்.