முதன் முதலில் வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கவிருந்தது ஹுமா குரேஷி கிடைத்து.. இந்த நடிகை தான்
கடந்த 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் நடிகர் அஜித்தின் வலிமை.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகி போனி கபூர் தயாரித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், இதுவரை வெளிவந்த அணைத்து படங்களை விட, வலிமை படத்தின் வசூல் பிரமாண்டமாக இருக்கிறது என்று போனி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விரைவில் வசூல் விவரத்தையும் வெளியிடவுள்ளார். வலிமை படத்தில் அஜித்தை தாண்டி ரசிகர்கள் மத்தியில் அப்லாஸ் பெற்றவர்கள், நடிகை ஹுமா குரேஷி மற்றும் வில்லன் கார்த்திகேயா.
இந்நிலையில், இதில் ஹுமா குரேஷி நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரபல பாலிவுட் நடிகை ப்ரணீதி சோப்ரா தானாம்.
அப்போது அவரால் நடிக்கமுடியாமல் போனதன் காரணமாக, நடிகை ஹுமா குரேஷியை படக்குழு அணுகியுள்ளனர்.