அஜித்தின் வலிமை படத்தை FDFS பார்க்க மாட்டேன்- எச்.வினோத் கொடுத்த ஷாக்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க நாளை பிரம்மாண்டமாக வெளியாகிறது வலிமை. படத்தை பற்றி எல்லா இடத்தில் இருந்தும் மிகவும் தரமான விமர்சனங்களாக வருகின்றன.
அதிலும் டிக்கெட் புக்கிங் எல்லாம் படு சூடாக நடந்து கொண்டிருக்கிறது. பல இடங்களில் 4,5 நாட்களுக்கான டிக்கெட் புக்கிங் எல்லாம் ஹவுஸ்புல் என்கின்றனர்.
இதுவரை பெரிய நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்டதை விட வலிமை படம் அதிக திரைகளில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
பல ரசிகர்கள் படத்தை FDFS காட்சி பார்த்துவிட வேண்டும் என டிக்கெட்டிற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படத்தை இயக்கிய எச்.வினோத் படத்தை முதல் நாள் முதல் காட்சி நான் பார்க்க மாட்டேன், படத்தை பல முறை பார்த்துவிட்டேன் என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
எல்லோரும் அந்த முதல் காட்சிக்காக போராடிக் கொண்டிருக்க இவர் இப்படி கூறுவது அஜித் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.