நானும் Me Too பிரச்சனையில் சிக்கினேன்.. நடிகை அனுஷ்கா கூறிய அதிர்ச்சி தகவல்
திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் ஒரு தவறான விஷயத்தை பல நடிகைகள் Me Too மூலம் பேசி வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் அனுஷ்கா.
இவர் முதல் முறையாக தனக்கு ஏற்பட்ட Me Too விஷயத்தை முறித்து பேசியுள்ளார்.
இதில் அவர் பேசியது " பெண்களுக்கு எதிரான தவறான விஷயம் சினிமாவில் மட்டும் இல்லை, எல்லா துறைகளிலுமே இருக்கிறது. நானும் சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த தொல்லையை சந்தித்தேன். ஆனாலும் பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை ஆனாலும், சில கஷ்டங்கள் இருந்தன ".
" ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது நிர்ப்பந்தம் செய்வது தவறு. தவறான கண்ணோட்டத்தில் நெருங்கும் ஆண்களிடம் முடியாது என்று மறுத்து விட்டால் பிறகு அவர்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். நமக்கு மரியாதை தரவும் தொடங்கி விடுவார்கள்.'' இவ்வாறு அனுஷ்கா பேசினார் ".
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri