நான் கமல் ரசிகன் தான்.. மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் டீன்ஸ் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. கமலின் இந்தியன் 2 படத்தோடு இது ரிலீஸ் ஆனதால் பார்த்திபன் ரிஸ்க் எடுக்கிறார் என ஆரம்பத்தில் பலரும் விமர்சித்தனர்.
ஆனால் இந்தியன் 2 படத்திற்கு வரவேற்பு கிடைக்காததால் டீன்ஸ் படத்திற்கு வரும் கூட்டம் அதிகரித்து இருக்கிறது. "முதல் நாள் கூட்டமேமேயில்லை, மறுநாள் டிக்கட்டே இல்லை" என கூறி பார்த்திபன் நன்றி கூறி இருக்கிறார்.
மன்னிப்பு
இந்நிலையில் பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு சில கமல் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்திய நிலையில் அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
"Friends நான் கமல் சாரின் தீவிர ரசிகன் என்பதை உலகறியும்
சில பதிவுகளை நானும், சிலதை என் adminனும்(எனக்கு நேரமின்மையால்) பதிவிடுகிறோம். தப்பித்தவறி ஏதேனும் தவறாக பதிவிட்டிருந்தால் மன்னிக்கவும்! (யார் மனமும் புண்படுதல் அதுவும் என்னால் என்பதை நான் விரும்ப மாட்டேன்) இனி நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.


இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
