திருமண கிசுகிசு.. நான் தனுஷுக்கு தீவிர ரசிகை! வியந்து பேசிய மிருனாள் தாகூர்
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருனாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் சமீபகாலமாக கிசுகிசு பரவி வருகிறது. நாங்கள் நண்பர்கள் மட்டும் தான், காதல் இல்லை என மிருனாள் பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டார். இருப்பினும் வதந்திகள் நின்றபாடில்லை.
கிசுகிசு பற்றி சமீபத்தில் பேசிய மிருனாள் தாகூர், 10 கோடி கொடுத்தாலும் இது போல ப்ரோமோஷன் கிடைக்காது என கிசுகிசு பரப்புபவர்களை சாடி இருந்தார்.

நான் தனுஷ் ரசிகை
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் தனுஷின் தீவிர ரசிகை என மிருனாள் தாகூர் பேசி இருக்கிறார்.
நான் தனுஷின் மிக மிக தீவிர ரசிகை. அசுரன் படத்தை தான் பல முறை பார்த்திருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் பார்ப்பேன் என கூறி இருக்கிறார். அவரது நடிப்பை அப்படி வியந்து பார்ப்பேன், அவருடன் எப்போதாவது நடிப்பேன் என்கிற ஆசையும் இருக்கிறது என மிருனாள் கூறி இருக்கிறார்.
Son Of Sardaar 2 பட ஸ்கிரீனிங் நிகழ்ச்சிக்கு வரும்படி அவர் தேரி இஸ்க் மேன் ஷூட்டிங்கில் இருக்கும்போது அழைத்தேன். அவர் வருவார் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர் வந்தபோது நான் அதிகம் மகிழ்ச்சி ஆகிவிட்டேன் என அவர் கூறி இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan