I am Kathalan திரை விமர்சனம்
மலையாள சினிமாவில் பெரிய நடிகர்கள், நடிகைகள் என்றில்லாமல் வெறும் சிறுவர்களை வைத்தே 50 கோடி வசூல் பார்த்தவர் கிரிஷ். இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து வந்த அனைத்து படங்களும் ஹிட் ஆக, ப்ரேமலு மலையாள சினிமாவின் மார்க்கெட்டை தெலுங்கிலும் கொண்டு சேர்ந்தது, அந்த வகையில் அதே கூட்டணியில் நீண்ட நாள் கிடப்பில் இருந்த ஐயம் காதலன் படம் இன்று திரைக்கு வர எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
நாயகன் நஸ்லான் கல்லூரி படிப்பு முடிந்து வேலை கிடைக்காமல் ஊர் சுற்றி வருகிறார், அதே நேரத்தில் ஹாக்கிங்கில் மிகவும் திறம்பட இருப்பவர், அதனாலேயே தன் நண்பனுக்கு சில இன்ஸ்டா ஐடி பாஸ்வர்ட் எல்லாம் ஹாக் செய்து கொடுக்கிறார்.
இதே நேரத்தில் நஸ்லானுக்கு ஒரு காதலும் இருக்கிறது, காதலியின் அப்பா பெரிய பினான்ஸ் கம்பெனி வைத்திருக்க, ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் அவருக்கு தெரிய வருகிறது.
இது தெரிந்து நஸ்லானை அவர் அடிக்க, நஸ்லான் காதலியின் அப்பாவை பழி வாங்க வேண்டும் என அவருடைய கம்பெனி சாப்ட்வேர்-யை ஹக் செய்ய, அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
நஸ்லான் மலையாள சினிமாவிற்கு கிடைத்த பெரும் நல்வரவு. இளம் வயது கதாபாத்திரம் என்றால் நம்ம ஊர் ஹீரோக்கள் மீசை, தாடியை எடுத்துவிட்டு நடிக்க வந்துவிடுவார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் அதே ஏஜ்-ல் இருக்கும் ஒரு துறு துறு பையனாக நஸ்லான் அசத்துகிறார்.
அதிலும் தன் காதலியிடம் அவமானப்பட்டு ஹோட்டலில் இருந்து கிளம்பும் போது, காதலியின் அப்பாவிடம் அடி வாங்கி அழுகையை அடக்கிக்கொண்டு நண்பர்களிடம் பேசும் போது என அனைத்து இடத்திலும் செம ஸ்கோர் செய்கிறார்.
படத்தில் ஹாக்கிங் என்றால் ஒரு சில ஆடியன்ஸுக்கு புரிய வாய்ப்பில்லை என்றாலும் அதை முடிந்த அளவிற்கு கிரிஷ் அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் படி கூறியுள்ளார்.
அதிலும் ஹாக் செய்பவன் எப்படி இருப்பான் என்று ஒரு கதாபாத்திரம் சொல்லுமிடமெல்லாம் இயக்குனருக்கே உண்டான கிண்டல் குசும்பு எல்லாம் இங்கு மட்டுமில்லை படத்தில் பல இடங்களில் வந்து செல்கிறது.
படத்தில் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் ஒரு சில இடத்தில் டல் ஆனாலும், நஸ்லானை கண்டுப்பிடிக்க லிஜிமோல் ஜோஸ் வரும் இடத்தில் மீண்டும் படம் சூடு பிடிக்கிறது, கிளைமேக்ஸில் லிஜிமோல் ஜோஸ் நஸ்லானை கண்டுப்பிடித்தாரா, என்று காட்டும் இடம் செம கலாட்டா தான்.
பின்னணி இசை ஒரு ஹாக்கிங், கம்ப்யூட்டர் சம்மந்தப்பட்ட படம் என்பதால் நிறைய கேமிங் சவுண்ட் வைத்து இசையமைத்தது ரசிக்க வைத்துள்ளது.
க்ளாப்ஸ்
நடிகர், நடிகைகள் பங்களிப்பு
படத்தின் திரைக்கதை.
படத்தின் ஒன் லைன்
காமெடி வசனங்கள்.
பல்ப்ஸ்
அழுத்தம் இல்லாத எமோஷ்னல் காட்சிகள்.