இனி ரஜினி கூட நடிக்க ஆசை இல்லை.. ஜெயிலர் பட நடிகர் இப்படி சொல்லிட்டாரே
74 வயதிலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து உச்ச ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கூலி படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
ரஜினி உடன் நடிக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவாக கூட இருக்கும். ஆனால் தனக்கு இனி அப்படி எந்த ஆசையும் இல்லை என நடிகர் சரவணன் கூறி இருக்கிறார்.
ரஜினி ரசிகர் மன்ற தலைவர் நான்
"நான் 12ம் வகுப்பு படிக்கும்போதே ரஜினி ரசிகர் மன்றத்தில் சேர்ந்துவிட்டேன். ஒருகட்டத்தில் ரசிகர் மன்ற தலைவராக இருந்தேன். அதன் பின் கௌரவ ஆலோசகராக இருந்தேன். ரஜினி சார் பிறந்தநாளுக்கு நான் பல முறை ரத்தம் கொடுத்து இருக்கிறேன்."
"நான் இரண்டு பேருக்கு தான் கைதட்டி இருக்கிறேன். ஒன்று எம்ஜிஆர், இன்னொன்று ரஜினிகாந்த். எம்ஜிஆருடன் நடிக்க எனக்கு வயது இல்லை, ஆனால் ரஜினி சார் உடன் ஜெயிலர் படத்தில் நடித்ததை பாக்கியமாக நினைத்தேன்."
"நெல்சனிடம் கேட்டேன், அது கிடைத்தது. இனிமேல் ரஜினி உடன் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்வேன்" என சரவணன் கூறி இருக்கிறார்.
மேலும் ஜெயிலர் 2 படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் சரவணன் தெரிவித்து இருக்கிறார்.