என்னை மட்டும் பாராட்ட மாட்டாங்க.. வருத்தமாக பேசிய சுந்தர்.சி
இயக்குனர் சுந்தர்.சி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். அவரது படங்களில் காமெடிக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அதனாலேயே அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில் சுந்தர் சி 12 வருடங்களுக்கு முன் இயக்கிய மதகஜ ராஜா படம் சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி ஹிட் ஆகி இருக்கிறது. அந்த படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது.
சுந்தர்.சி வருத்தம்
மேடையில் பேசிய சுந்தர்.சி, "கமர்ஷியல் படம் பெரிய வெற்றி அடையும், ஆடியன்ஸ் ரசிப்பாங்க, கூட்டம் கூட்டமாக வருவாங்க. ஆனால் எனக்கு உள்ளுக்குள் ஒரு வருத்தம் இருக்கிறது. எனக்கு பெரிய பாராட்டுகள் கிடைக்காது."
"நல்ல இயக்குனர்கள் என பட்டியல் போட்டால், இவ்வளவு ஹிட் கொடுத்த என் பெயர் அதில் இருக்காது. அந்த வருத்தம் எனக்கு இருக்கிறது. எனக்கு அந்த position இன்னும் கிடைக்கவில்லை. அதற்காக நான் கவலைப்படவும் இல்லை" என சுந்தர்.சி சோகமாக பேசி இருக்கிறார்.