தமன்னா பிரேக்கப் காரணம்.. ஒரே வரியில் அவர் சொன்ன பதில்

Parthiban.A
in பிரபலங்கள்Report this article
நடிகை தமன்னா தற்போது தேசிய அளவில் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார். அதற்கு காரணம் சமீப காலமாக அவர் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆடும் நடனம் பெரிய ஹிட் ஆவது தான்.
தமன்னா கடந்த சில வருடங்களாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் அவரை பிரிந்துவிட்டார்.
35 வயதாகும் நிலையில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக தமன்னா விரும்பியதாகவும், ஆனால் விஜய் வர்மா அதற்கு தயாராக இல்லை என சொன்னதால் வந்த சண்டை தான் பிரேக்அப்புக்கு காரணம் என சொல்லப்பட்டது.
ஒரே வரியில் பதில்
இந்நிலையில் தற்போது தமன்னா அளித்த ஒரு பேட்டியில் இது பற்றி மறைமுகமாக பேசி இருக்கிறார்.
"என் பர்சனல் வாழ்க்கையை எப்போதும் private ஆக தான் வைத்திருப்பேன்" என ஒரே ஒரு வரி மட்டும் அவர் கூறி இருக்கிறார்.
அதனால் பிரேக்கப் விஷயம் பற்றி வெளிப்படையாக அவர் பேச விரும்பவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.