நாடகம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.. நடிகை டாப்சியின் விருப்பம்
கதாநாயகி டாப்சி
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து அஜித்தின் ‘ஆரம்பம்’, லாரன்ஸுடன் ‘காஞ்சனா 2’, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற இவர், அங்கு வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

மேலும் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை குறி வைத்து நடித்து வருகிறார்.
நாடகம் இல்லாமல் திருமணம்
இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், எந்த மாதிரியான திருமண வாழ்க்கை வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், நாடகம் இல்லாத திருமணத்தை விரும்புவதாகவும். தனது திருமணம் எளிமையாகவும், சுமுகமாகவும், குழப்பம் அற்றதாகவும், எந்த நாடகத்துக்கும் இடமில்லாமல் இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் நடிகை டாப்சி.
யாருக்கும் தெரியாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து இந்த பிரபலம் வெளியேறினாரா?
500 கோடி பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் வீசிய கடைக்காரர்- அதிர்ஷ்டத்தை இழக்கவிருக்கும் பிரித்தானிய பெண் News Lankasri