நான் தென்னிந்திய படங்களை பார்க்க மாட்டேன்.. பேட்ட பட வில்லன் நடிகர் சர்ச்சை கருத்து
தற்போது ஹிந்தி vs தென்னிந்திய மொழிகள் பிரச்சனை தான் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்தி தேசிய மொழி அல்ல என கன்னட நடிகர் சுதீப் கூறிய நிலையில் அதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் சர்ச்சையாக பதில் அளித்து இருந்தார்.
இந்தி தான் தேசிய மொழி என அவர் கூற இணையத்தில் பெரிய கருத்து மோதல் நடந்தது. அதற்கு பிறகு பல தென்னிந்திய நடிகர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்களும் இந்த விவாதத்தில் இறங்கி இருக்கின்றனர். சமஸ்க்ரிதம் தான் தேசிய மொழி என கங்கனா ரணாவத் நேற்று கருத்து கூறி இருந்தார்.
புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2 என தென்னிந்திய படங்கள் ஹிந்தியில் நல்ல வசூல் குவித்த நிலையில் தான் இந்த பிரச்சனை வெடித்து இருக்கிறது.

நவாஸுதீன் சித்திக் கருத்து
இந்நிலையில் ரஜினியின் பேட்ட படத்தின் ரஜினிக்கு வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் அளித்திருக்கும் பேட்டியில் தான் தென்னிந்திய படங்களை எப்போதும் பார்த்ததில்லை என கூறி இருக்கிறார்.
அவரது கருத்து தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதத்தில் அவரது இந்த பேச்சு இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.