டூரிஸ்ட் பேமிலி ஹிட்.. சம்பளத்தை உயர்த்த போகிறேனா? சசிகுமார் மேடையிலேயே சொன்ன பதில்
நடிகர் சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த படம் ஹிட் ஆகி இருக்கும் நிலையில் வெற்றி விழா இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிக்குமார் "இந்த படம் முதல் நாளில் 2.5 கோடி ரூபாய் வசூலித்தது, என் முந்தைய படம் ஒன்று மொத்தமாகவே 2.5 கோடி தான் வசூலித்து இருந்தது என்பதை தெரிந்துகொண்டேன்" என கூறி இருக்கிறார்.
சம்பளத்தை உயர்த்துகிறேனா?
ஒரு படம் ஹிட் ஆகிவிட்டால் உடனே ஹீரோ தனது சம்பளத்தை உயர்த்துவது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். அது பற்றி பேசிய சசிக்குமார் "சம்பளத்தை உயர்த்துகிறேனா என கேட்கிறார்கள். நான் ஏற்றவில்லை. அதே சம்பளம் தான். சம்பளம் ஏறினால் பட பட்ஜெட் அதிகரித்துவிடும்" என சசிக்குமார் பேசி இருக்கிறார்.
தோல்வி அடைந்தால் அதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
