நானும் சூர்யாவும் முத்தமிட்ட புகைப்படத்தை... ஜோதிகா கூறிய விஷயம்..
சூர்யா-ஜோதிகா
தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளில் ஒரு ஜோடி தான் சூர்யா-ஜோதிகா.
படங்களில் சேர்ந்து நடிக்கும் போது காதல் ஏற்பட இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கோலாகலமாக கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

அண்மையில் இவர்கள் தங்களது 20வது திருமண நாளை தங்களது குழந்தைகள் முன் மீண்டும் திருமணம் செய்து கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜோதிகா தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வந்தனர்.
கமெண்ட்
அப்படி ஜோதிகா வெளியிட்ட ஒரு புகைப்பட பதிவிற்கு கீழ் தொகுப்பாளினி டிடி, மேம், Now you may kiss the bride போட்டோ எங்கே ? என கமெண்ட் செய்துள்ளார்.

அதற்கு ஜோதிகா, எங்களிடம் அந்தப் போட்டோ இருக்கு, ஆனால் ஷேர் செய்ய மாட்டோம் என ஜாலியாக பதிலளித்துள்ளார். ஸ்காட்லாந்தில் உள்ள பிளேர்குவான் கோட்டையில் இவர்களின் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.