எங்க அப்பா இல்லனாலும் நான் ஸ்டார் ஆகிருப்பேன்.. தளபதி விஜய்யின் அதிரடி பேச்சு..
தமிழ் சினிமாவின் முன்னணி உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி வெளியாக காத்திருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து தற்போது தன்னுடைய 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய்.
நடிகர் விஜய் அவரது தந்தை எஸ்.ஏ.சியின் இயக்கத்தில் தான் நாளைய தீர்ப்பு எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பதை நாம் அறிவோம்.
இந்த விஷயத்தை குறித்து, உங்க அப்பாவின் இயக்கத்தினால் தான் உங்களால் சீக்கிரமாக ஹீரோவாக முடிந்தது என்ற கேள்வி விஜய்க்கு பல முறை எழுந்துள்ளது.
அதற்கு பதிலளிக்கும் வகையில் விஜய் பேசியுள்ளார். இதில் " நான் எங்க அப்பா இல்லனாலும் நான் ஸ்டார் ஆகிருப்பேன். என்ன, இன்னும் கொஞ்சம் வருடம் கழித்து, 1996ல் கதாநாயகனாக அறிமுகமாகி இருப்பேன். ஆனால் கண்டிப்பாக திரைத்துறையில் ஹீரோவாக ஆகிருப்பேன். " என்று கூறியுள்ளார்.